பரத்தின் 3 கெட்டப்

By Staff

Barath and Meerajasmine
ஹரியின் இயக்கத்தில் உருவாகும் சேவல் படத்தில் பரத், 3 விதமான வித்தியாசமான கெட்டப்பில் அசத்துகிறாராம்.

ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் சேவல். வேல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இப்படத்தை இயக்குகிறார்.

பரத் தான் இதில் ஹீரோ. வணிகப் படங்களில் தனிமுத்திரை படைத்து வரும் ஹரியும், சமீப காலமாக வணிக ரீதியான ஹீரோவாக மாறியுள்ள பரத்தும் இப்படத்தின் மூலம் இணைவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிட்டிசன்' அஜித் போல் 3 கெட்டப்புகளில் வருகிறாராம். எதிரிகளைப் பழிவாங்க இப்படி மூன்று வெவ்வேறு கெட்டப்புகள் போடுகிறாராம் பரத்.

3 கெட்டப்பும் அட்டகாசமாக இருக்குமாம். படு ரகளையாக இந்த கெட்டப்களை வடிவமைத்துள்ளாராம் ஹரி.

முதலில் பரத்துக்கு மலையாள நடிகை பாமாதான் கதாநாயகி என்று சொல்லப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயின் தேடி வருகிறார்கள்.

படத்தில் இன்னொரு அட்டகாசமும் இருக்கிறதாம். அது சிம்ரன். சிம்ரனுக்கும், பரத்துக்கும் என்ன உறவு என்பதை ஹரி ரகசியமாக வைத்திருக்கிறார். ஆனால் படு கலக்கலாக இருக்குமாம் சிம்ரனின் வேடம். குறிப்பாக பரத்தும், சிம்ரனும் வரும் காட்சிகள் பட்டையைக் கிளப்புமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X