கீதை-ரஜினி விளக்கத்துக்கு யாதவர் சங்கம் கண்டனம்

By Staff

Rajini
சென்னை: சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது ''கடமையைச் செய்; பலனை எதிர்பார்'' என்று போர்ட் எழுதி வைத்திருந்தார் ரஜினி.

மேலும் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில், கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிறார்கள். ஆரம்பத்தில் நான்கூட அப்படித்தான் நெனச்சேன். ஆனா யோசிச்சுப் பார்த்தேன். இந்த உபதேசம் சாதாரண மக்களுக்கு அல்ல. அதுக்கும் அடுத்த ரேஞ்சுக்குப் போய்ட்ட மகான்கள், வீரர்களுக்குத்தான் சரியா இருக்கும்.

வெளிநாடுகள்லே சொல்றதே, கடமையை செய்; பலனை எதிர்பார் என்றுதான்.

பலன் இல்லாம கடமையைச் செஞ்சா என்ன பலன்... மூட்டைத் தூக்குற ஒருத்தரிடம், நீ தொடர்ந்து மூட்டையை மட்டுமே தூக்கு, கூலியை எதிர்பார்க்காதேன்னு சொன்னா... சொல்றவன் தலைலயே அந்த மூட்டையைப் போட்டுடுவான்.

அதனால் உன் கமையை ஒழுங்கா செய்; அதற்குரிய பலனை எதிர்பார், கிடைக்கும்... இதான் சரியா இருக்கும் என்றார் ரஜினி.

கண்டனம்:

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பகவத் கீதையை ரஜினி அவமானப்படுத்தி விட்டார், இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரஜினியின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இந் நிலையில் கோனார் சமூகத்தினர் அமைப்பின யாதவ மகா சபை ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் டி.தேவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறிதை இழிவுபடுத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும். பகவத் கீதையை குறை கூற ரஜினிக்கு தகுதி இல்லை. கடவுளின் வேதத்தை இவர் எப்படி மாற்றலாம் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X