சீயானின் 'மெகா' சம்பளம்!

கந்தசாமி படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை பெற்ற போதிலும், இந்த படம் தனது திரை வாழ்க்கையின் முக்கிய படங்களில் ஒன்று அல்ல என விக்ரம் மறைமுகமாக கூறிவிட்டார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இரு மொழிகளில் வெளிவர இருக்கும் ராவணா படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.இந்த படம் தனக்கு பெரிய அளவில் வெற்றி தேடி தரும் என நம்புகிறார்.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் ஹீரோ வேடம் கட்டியுள்ள அவர் இந்தியில் வில்லனாக தோன்றுகிறார். இதில் அவரது பாத்திரத்துக்கான படப்பிடிப்பு வரும் 22ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து அவர் அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் கனகரத்னா மூவிஸ் ரமேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு அவர் வாங்கியிருக்கும் தொகை மிகப் பெரிதாம். இதற்கு முன் வேறு எந்த படத்துக்கு விக்ரம் இவ்வளவு பெரிய தொகை வாங்கியதில்லையாம்.
இந்த படத்தின் ஷூட்டிங் லடாக், கோவா மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவருடன் ஜோடியாக சேரவிருப்பவர் 'சுப்ரமணியபுரம்' சுவாதியாம். படத்தின் கதை உட்பட மற்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சோனியா அகர்வாலை விட்டுப் பிரிந்த பின்னர் செல்வராகவன் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











