கமல்ஹாசனுன் இணையும் அனில் கபூர்!

By Chakra

Anil Kapoor and Kamal Hassan
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.

கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம்.

கமல் டக்கென்று ஓ.கே. சொன்னவுடன் குஷியாகி விட்டாராம் அனில் கபூர். கமல்ஹாசனின் ரசிகர் நான். அவருடைய படங்களை நான் இந்தியில் ரீமேக் செய்து நடித்துள்ளேன். இப்போது நான் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய அளவில் எனக்குப் பிடித்த நடிகர் கமல்தான். அவரது தீவிர ரசிகன் என்று நான் மும்பையிலேயே சொல்வேன் என்றார் அனில்கபூர்.

விரைவில் இந்தப் படத்தின் இதர விவரங்களை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியில் தலை காட்டுகிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X