ஷாருக்கான், ஆமிர்கானை ஓரம் கட்டி அசத்திய பிரகாஷ் ராஜ்

கடந்த சில நாட்களாகவே இந்தி மற்றும் ஆங்கில மீடியாக்களில் வெளியாகி வந்த செய்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக் கானுக்கோ அல்லது ஆமிர்கானுக்கோதான் கிடைக்கும் என எழுதி வந்தன. மேலும் பல்வேறு இந்திப் படங்களைத்தான் விருது பெறும் வாய்ப்புள்ள படங்களாக அவை கூறி வந்தன.
ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் பிரகாஷ் ராஜ் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ஷ்ரேயா ரெட்டி, ஷம்மு ஆகியோர் நடித்து வெளியான படம்தான் காஞ்சிவரம். இப்படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரகாஷ் ராஜ்.
காஞ்சிபுரம் நெசவுத் தொழிலாளர்களின் ஏழ்மையான வாழ்க்கையைப் பிரதிபலித்த படம் இது.
தனது அபாரமான இயல்பான நடிப்பு காரணமாக பிரகாஷ் ராஜுக்கு விருது கிடைத்துள்ளது.
இரு பெரும் கான்களை ஓரம் கட்டியுள்ள பிரகாஷ் ராஜுக்கு இது 3வது தேசிய விருது.
முதலில் அவர் பெற்றது இருவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருது. 2003ம் ஆண்டு அவரே தயாரித்து, நடித்த தயா படத்திற்காக ஜூரி விருது கிடைத்தது. தற்போது சிறந்த நடிகர்களின் ஒரே கனவான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டி விட்டார் பிரகாஷ் ராஜ்.
தமிழகத்தில் 4வது நடிகர் ...
தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவது இது நான்காவது முறையாகும்.
இதற்கு முன்பு கமல்ஹாசன் 3 முறை இந்த விருதைப் பெற்றுள்ளார். அவரது அண்ணன் சாருஹாசன் ஒரு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பிதாமகன் படத்துக்காக விக்ரம் தேசிய விருது பெற்றார். தற்போது பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
கலக்கு செல்லம்..!


Click it and Unblock the Notifications











