அக்னி-மக்களுக்கு மோர் வழங்க ரஜினி உத்தரவு!

இதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டப வாசலில் பந்தல் அமைத்து அங்கு வருவோருக்கெல்லாம் மோர் வழங்கி குளிர்வித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள். நகரின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மன்ற ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா கூறியதாவது: தலைவர் எதையும் பப்ளிசிட்டிக்காகச் செய்வதில்லை. ஆனால் அதுவே பெரிய பப்ளிசிட்டியாகிவிடுகிறது.
இந்த நீர்மோர் வழங்குவதும் இன்று நேற்றல்ல, ஒவ்வொரு கோடையிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ன மாதமே தலைவர் மோர் பந்தல் அமைக்குமாறு கூறிவிட்டார்.
இத்கென தினமும் 30 லிட்டர் பால் வாங்கி உறைகுத்தி தயிராக்கிவிடுகிறார்கள் நமது மன்றத்தினர். அடுத்தநாள் பெரிய கேன்கள் மற்றும் பானைகளில் வைத்து எல்லாருக்கும் கொடுக்கிறோம்.
30 லிட்டர்தானா என்று கேட்காதீர்கள். அது ஒரு அளவுதான். தேவையான அளவு பாலை வாங்கிக் கொள்ளுமாறு தலைவர் கூறிவிட்டார். இந்த அக்னி நட்சத்திர வெயில் நாட்களில் இன்னும் கூடுதலாக பால் வாங்கச் சொல்லியிருக்கிறேன்...என்றார் சத்தி.
ராகவேந்திரா மண்டபம் வழியாக நடந்து செல்வோர் மண்டபத்துக்குள் நுழைந்து மோர் வாங்கி குடித்து வெயில் கொடுமையை தணிப்பதைப் பார்க்க முடிகிறது.
காரில், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் சில நிமிடங்கள் நிறுத்தி மோர் வாங்கிக் குடித்து விட்டுச் செல்கின்றனர்.
இதே போல ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஏராளமான மோர்ப் பந்தல்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற மோர் மற்றும் தண்ணீர்ப் பந்தல்களை மன்றத்தினர் அமைத்துவருவதாக சத்தியநாராயணா தெரிவித்தார்.
கூல்!
ஜூலை 18ல் குசேலன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் ஜூலை கடைசி வாரத்தில் திரைக்கு வரவுள்ளது.
மலையாள சூப்பர் ஹிட் படமான கத பறயும்போள் படத்தின் ரீமேக்தான் குசேலன். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்படுகிறது. ரஜினிகாந்த், நயனதாரா, மீனா, பசுபதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தில் ஷூட்டிங் உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளை பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் பி.வாசு.
ஷூட்டிங் நடக்கும் பகுதியில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள் கூடி ரஜினியை 'தரிசனம்' செய்து வருகின்றனர்.
ரஜினியும், ரசிகர்களைப் பார்த்து கை அசைப்பது, அவர்களை அழைத்துப் பேசுவது என ஜாலியாக இருக்கிறார். சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும்போது அதையும் தட்டாமல் அனுமதிக்கிறாராம் ரஜினி.
ரசிகர்களோடு ஜாலியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார் ரஜினி. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
படத்தை உலகம் முழுவதும் 900 பிரின்டுகளுடன் ரிலீஸ் செய்யவுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் மட்டும் 700 பிரின்டுகள் போடப்படவுள்ளன. 90 பிரிண்டுகள் கேரளாவுக்குப் போகிறது. மீதம் உள்ள பிரின்டுகள் அனைத்தும் வெளிநாடுகளுக்குச் செல்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு விநியோக உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ. 64 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.
ரஜினி இப்படத்தில் சூப்பர் ஸ்டாராகவே வருகிறார். அவரது காதலியாக நயனதாரா நடிக்கிறார். மீனா, பசுபதி ஜோடி போட்டுள்ளனர். காமெடிக்கு வடிவேலு.
குசேலனில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த வார இறுதியுடன் முடிவடைகிறதாம்.


Click it and Unblock the Notifications











