குறளரசன் பிறந்த நாள்: நட்சத்திர ஹோட்டலில் சிம்பு கொண்டாட்டம்
தன் தம்பி குறளரசன் பிறந்த நாளை நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக கொண்டாடினார் நடிகர் சிம்பு (எஸ்டிஆர்!).
கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடந்த போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு, தம்பி குறளரசன் பிறந்தநாளையொட்டி இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
சென்னை 5 நட்சத்திர ஓட்டலில் பெரிய அரங்கில் குறளரசன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதில் அவரது தங்கை இலக்கியாவும் பங்கேற்றார். நண்பர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்தும் நடந்தது.
இதுபற்றி சிம்பு கூறும் போது, "என் தம்பிக்காக பிறந்த நாள் விருந்தை ஏற்பாடு செய்தேன். தம்பியின் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா சம்பந்தப்பட்ட யாரையும் அழைக்கவில்லை. குறளரசன் சினிமாவில் நடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பா படத்தில் விரைவில் அறிமுகமாவார்," என்றார்.


Click it and Unblock the Notifications











