அப்பாவாகிறார் ஸ்ரீகாந்த்

ஒரு பரபரப்பான திரைப்படத்திற்கு நிகரான விறுவிறுப்பான நிகழ்வுகளுடன் நடந்து முடிந்த திருமணம் ஸ்ரீகாந்த் - வந்தனாவுடையது.
பெரும் சலசலப்புக்குப் பின்னர் வந்தனாவுடன் வாழ ஆரம்பித்த ஸ்ரீகாந்த் இப்போது மகிழ்ச்சியின் சிகரத்திற்குப் போயுள்ளார். காரணம் மனைவி வந்தனா கர்ப்பமாக இருக்கிறாராம்.
மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம்.
செல்லக் குழந்தையை மனைவி வந்தனா வயிற்றில் சுமந்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ள பூ படம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
மனைவியும், குழந்தையும் தனது வாழ்க்கையில் புது வசந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக பூரிப்புடன் கூறி வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications