உரிமைக்குரல்..விஜய்யின் 50வது படம்!

ஸ்ரீதர் இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படத்தின் தலைப்பு இது.
இந்தப் படத்தை இயக்குபவர் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஜெயம் ராஜா அல்ல. அதிரடி கரம் மசாலா இயக்குநர் பேரரசு!
தனது மீனாட்சி ஆர்ட்ஸ் பேனரில் இந்தப் 50வது படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சங்கிலி முருகன். கதாநாயகி தமன்னா.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை எஸ்ஏ சந்திரசேகரன் தனது சூரியன் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக தயாரிப்பார் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் காதலுக்கு மரியாதை ராசியை நினைவு கூர்ந்த எஸ்ஏசி, இந்தப் படத்தை சங்கிலி முருகன் தயாரிப்பதே நல்லது என்று கூறிவிட்டாராம்.
தமன்னா இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரூ.50 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டுள்ளார் விஜய்.
தனது பிறந்தநாளில் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடுவார் விஜய்.
பேரரசுவும், விஜய்யும் ஏற்கனவே சிவகாசி, திருப்பாச்சி என இரு அதிரடிப் படங்களைக் கொடுத்தவர்கள். எனவே உரிமைக் குரலிலும் அவர்களின் இடி முழக்கம் ஏகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications