பாடகரானார் விக்ரம்

திரையுலகில் யார் வேண்டுமானாலும் இப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது எந்த துறைக்கும் தாவலாம். இது பேஷனாகி வருகிறது.
இயக்குநர்கள் உள்பட பலரும் இப்போது ஹீரோக்கள் ஆகி வருகின்றனர். அதேபோல ஹீரோக்கள் பாடுவதும் அந்தக் காலம் முதலே இருந்து வருகிறது.
லேட்டஸ்டாக இந்த வரிசையில் இணைந்துள்ளார் விக்ரம். இவர் ஏற்கனவே ஜெமினி படத்திற்காக ஓ போடு பாடலைப் பாடியவர்தான்.
ஆனால் கந்தசாமியில், முழுசாக நான்கு பாடல்களைப் பாடியுள்ளாராம் விக்ரம். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.
நான்கு பாடல்களையும் நான்கு விதமான பாணியில் பாடி அசத்தியுள்ளார் விக்ரம். இப்பாடல்கள் மூலம் சிறந்த பாடகராகவும் இனி அவர் அறியப்படுவார் என கூறுகிறார் இயக்குநர் சுசி. கணேசன்.
விக்ரமுக்கு ஒரு ஓ போடுவோமா?
Comments


Click it and Unblock the Notifications