twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 இடியட்ஸ் விலகல் ஏன்?- விஜய் விளக்கம்

    By Chakra
    |

    3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்காதது குறித்து வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் விஜய்.

    இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின.

    ஆனால் படத்துக்காக அவர் கெட் அப் மாற்றவேண்டும் என்பதில் ஷங்கர் பிடிவாதமாக இருந்துள்ளார்.

    விஜய் முடிவெட்ட வேண்டும். விக் வைக்க வேண்டும் என்று ஷங்கர் வற்புறுத்தியதாகவும் விஜய் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. இரு தினங்களுக்கு முன் இந்தப் படத்திலிருந்து விஜய் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

    இதுபற்றி விஜய்யிடம் கேட்டதற்கு, "3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை தயாரிப்பாளர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

    நான் பெரிதாக மதிக்கும் இயக்குனர் ஷங்கர். அவர் தமிழ் சினிமாவை புதிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் படத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். ஆனாலும் எனக்கு கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன.

    காவலன் படத்துக்கு சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதுபோன்ற பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

    இவற்றைத் தாண்டி படத்தை வெளியிட்டாக வேண்டும். காமெடி, காதல், சென்டி மெண்ட் என முழுக்க முழுக்க ஒரு விஜய் படமாக காவலன் இருக்கும். மலையாள கதையை 75 சதவீதம் மாற்றிவிட்டோம். வேலாயுதம் படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலை இருக்கிறது இந்தப் படத்தில். இதன் பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பது குறித்து சொல்வேன்...", என்றார்.

    English summary
    Vijay says that he is willing to act in Shankar"s 3 Idiots, but his call sheet schedule not allow him, to join with Shankar"s crew immediately. At present his concentration is in his forthcoming releases Kaavalan and Velayutham. According to him, only 50 percent of his Velayutham shooting is completed. So at present, as Vijay says, it is not possible to participate in 3 Idiots shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X