நடிகர் ஷாம் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது!

12 பி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, இயற்கை, உள்ளம் கேட்குமே என வித்தியாசமான படங்கள் மூலம் தனி இடம் பிடித்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கிக் தெலுங்குப் படம் ஆந்திராவில் வசூல் சாதனை புரிந்தது. இப்போது அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தில்லாலங்கிடியில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார். அகம் புறம், தூசி என புதிய படங்கள் ரிலீஸாக உள்ளன.
ஷாமின் மனைவி கஷீஷுக்கு நேற்று பெங்களூர் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்தார் ஷாம்.
இது ஷாமுக்கு 2வது குழந்தையாகும். ஏற்கெனவே ஸமைரா என்ற பெண் குழந்தை உள்ளார்
Comments


Click it and Unblock the Notifications