மலையாளப் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்

காந்தஹார் என்ற பெயரில் மேஜர் ரவி ஒரு படத்தை இயக்குகிறார். இது, 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான் தீவிரவாதிகளால், ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட படமாகும்.
இதில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். தற்போது அவருடன் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளதாக ரவி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கொச்சி வந்திருந்த அமிதாப் பச்சன், மோகன்லால் மற்றும் ரவியுடன் விரிவான ஆலோசனையை நடத்தினார்.
இதுகுறித்து ரவி கூறுகையில், அமிதாப் பச்சனிடம் காந்தஹார் படத்தின் கதையை தெரிவித்தோம். கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. நிச்சயம் செய்கிறேன் என்றும் உடனடியாக தெரிவித்தார்.
அமிதாப் பச்சனின் வசதிக்கேற்ப ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.
ஹைஜாக் செய்யப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியின் தந்தை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளாராம். அவருடைய காட்சிகளை மும்பை அல்லது டெல்லி விமான நிலையத்தில் வைத்து படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் 2வது பாதியில் அமிதாப் பச்சன் கேரக்டர் வருகிறதாம். மேலும், சக்தி வாய்ந்ததாகவும் அந்த கேரக்டர் மாற்றப்பட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











