ஷாருக்கை வாரும் அக்ஷய்குமார்!

பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கானை வாருவற்காகவே சில நடிகர்கள் அவ்வப்போது வம்பு இழுப்பது வழக்கம்.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் அக்ஷய் குமார். இவர் நடித்த 'சிங் இஸ் கிங்' விரைவில் வெளியாகவுள்ளது. படத்தில் ஷாருக் முகமூடியை சரமாரியாக அடிப்பது போல ஒரு காட்சியை வைத்துள்ளனர். இது பாலிவுட்டில் சரச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், ஷாருக்கை மறைமுகமாக தாக்கியுள்ளார் அக்ஷய் குமார். 'சிங் இஸ் கிங்' புரமோஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்ஷய் குமார், நான் இப்படத்தில் வெறுமனே நடித்துள்ளேன். அமிதாப் பச்சன்தான் உண்மையான கிங். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக அவர் பாலிவுட்டின் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சில பேர் 15-20 வருடங்களாக நடித்துக் கொண்டு தங்களை கிங் என்று கூறிக் கொள்கிறார்கள். சும்மா வேண்டுமானால் அப்படி அவர்கள் தங்களை கிங் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒரே ராஜாதான். அது அமிதாப் மட்டும்தான்.
இன்னும் 40 ஆண்டுகள் கழித்தாலும் கூட அமிதாப்தான் பாலிவுட்டின் ஒரே கிங். அவர் மிகவும் எளிமையான மனிதர். அவருடன் நான் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை மாதிரி யாரையும் பார்த்ததில்லை. நான் இப்படிப் பேசுவது சர்ச்சையைக் கிளப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார் அக்ஷய் குமார்.
கிங் கான் என்று ஷாருக் கானுக்கு செல்லப் பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத்தான் அக்ஷய் குமார் இப்படி வாரியுள்ளார்.
அமிதாப்பச்சன் வட அமெரிக்காவில் மேற்கொண்டுள்ள அன் பர்கட்டபிள் டூர் பயணத்திலும் அக்ஷய்குமார் இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











