மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா?-அமிதாப்

ஊட்டியில் முகாமிட்டுள்ளார் அமிதாப் பச்சன். அங்கு மோகன்லால் நடிக்கும் காந்தஹார் படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஷூட்டிங் இடைவேளையின்போது அமிதாப் பச்சன் கூறுகையில்,
நான் தமிழ்நாட்டுக்குப் புதிதில்லை. பலமுறை இங்கு வந்துள்ளேன். நிறைய நண்பர்கள் உள்ளனர். இருந்தாலும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
மொழி எனக்குப் பிரச்சினை இல்லை. தமிழில் நடிக்கவும் நான் தயார். மலையாளத்தில் நடிக்கும்போது தமிழில் மாட்டேனா. எனக்குப் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார் அமிதாப்.
Comments


Click it and Unblock the Notifications