காவல்காரன் டைட்டிலுக்கு சத்யா மூ்வீஸ் எதிர்ப்பு-காவல் காதல் என மாற்றம்

By Chakra

Vijay and Asin
விஜய் படத்துக்கு காவல்காரன் என பெயரிடுவதற்கு ஆர்.எம். வீரப்பனின் சத்யாமூவிஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அப்படத்தின் பெயரை காவல் காதல் என மாற்றியுள்ளனர்.

விஜய், ஆசின் நடிக்க, சித்திக் இயக்க உருவாகி வரும் படம் காவல்காரன். இப்படம் மலையாளத்தில்வெளியான பாடிகார்ட் படத்தின் ரீமேக் ஆகும். ராஜ் கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு காவல்காரன் என பெயரிட்டிருந்தனர். இது அந்தக் காலத்தில் சத்யா மூவிஸ் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளியான படமாகும். இந்த நிலையில் சத்யாமூ்விஸ் நிறுவனத்தார் திடீரென படத்தின் தலைப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினர்.

அதில்,இந்தப் படத் தலைப்பை பயன்படுத்த நாங்கள் யாருக்கும் உரிமை தரவில்லை. எனவே இதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருந்தனர்.

இதையடுத்து விஜய் படத் தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு கடிதம் எழுதியது. அதில், பழைய படங்களின் பெயரை வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விதி.
காவல்காரன் தலைப்புக்கு சத்யாமூவிஸ் ஆட்சேபனை தெரிவித்திருப்பதாலும், அனுமதி தராததாலும் உங்களது படத்துக்கு வேறு டைட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது.

இதையடுத்து காவல்காரன் என்ற தலைப்பை காவல் காதல் என மாற்றி விட்டனர்.

சத்யா மூவிஸ் நிறுவனம் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தொடங்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X