twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

    By Shankar
    |

    தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களில் நடித்த நடிகர் தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    தனுஷ் சம்பளம் இப்போது ரூ. 8.5 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும், இது நியாயமல்ல என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தனுஷ் நடித்த மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம், உத்தம புத்திரன் ஆகிய நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. குறிப்பிட்ட சேனல் மூலம் பிரமாண்டமாக காட்டப்பட்ட இப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தின. எனவே தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ராமேஸ்வரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தனுஷ் உள்ளிட்ட சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்கள் பற்றி பேச உள்ளோம். சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் வற்புறுத்த உள்ளோம். தயாரிப்பு செலவுகள் குறைத்தால்தான் சினிமா தொழிலில் இருக்கும் அத்தனை பேரும் லாபம் சம்பாதிக்க முடியும்.

    தோல்விப் படங்கள் கொடுத்த தனுஷ் போன்றவர்கள் ரூ. 8 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டால் எப்படி லாபம் ஈட்ட முடியும். இதற்கு பொதுக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்," என்றார்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது, நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்தால்தான் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் அடைய முடியும். சில நடிகர்களின் படங்கள் டி.வி. சேனல்கள் மூலம் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டன.

    இதன் மூலம் அந்த நடிகர்கள் தங்களை பெரிய நடிகர்களாக கருதி சம்பளத்தை உயர்த்திக் கொண்டனர். அனால் நிஜத்தில் அது போன்ற படங்கள் ஓடவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுத்தது போல செயற்கையாகத்தான் ஓட்டப்பட்டன. அந்த படங்களால் நஷ்டங்கள் தான் ஏற்பட்டன," என்றார் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்.

    English summary
    A section of exhibitors and distributors of Tamil film Industry raised their voices against actor Danush for demanding more than Rs 8 cr as salary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X