twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் எனக்கெதற்கு? - அமிதாப் கேள்வி

    By Shankar
    |

    Amitabh Bachchan
    அகமதாபாத்: அரசியலில் எனக்கு ஆர்வமே இல்லை. எனக்கெதற்கு அரசியல் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

    குஜராத்தில் சுற்றுலாத்துறையை பிரபலப் படுத்துவதற்காக நடிகர் அமிதாப்பச்சனை விளம்பரத் தூதராக மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமித்தது.

    இதையடுத்து, அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேருவார் என்று தகவல்கள் பரவின. இதை அமிதாப்பச்சன் மறுத்தார்.

    இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில், "அரசியலில் நுழையும் திட்டமோ ஆர்வமோ எதுவும் எனக்கு இல்லை. அரசியலில் நான் தோற்று விடுவேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதை அனுபவத்தில் உணர்ந்தும் விட்டேன்.

    எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கெதற்கு அரசியல்?

    சுற்றுலாத்துறையின் விளம்பர தூதராக, குஜராத் மாநில அரசு என்னை நியமித்துள்ளது. அதற்காக, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டேன். வேண்டுமென்றால் வாய்ப்பு கொடுங்கள்... குஜராத்தி மொழிப்படத்தில் நடிக்கிறேன்," என்றார்.

    மேலும் அவர் கூறுகையில் நிறைய குஜராத்திகள், தங்கள் மாநிலமான குஜராத் பற்றி தனது ப்ளாக் மூலம் படித்து தெரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

    English summary
    Amitabh Bachan, the superstar of Bollywood says that he wouldn't enter politics and he thought that he is not fit for the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X