'இன்றைய தொண்டன் நாளைய தலைவன்...' கதிகலக்கும் விஜய்!

By Staff

Vijay with Nayanatara
நடிப்பில் மட்டுமல்ல... அரசியல் பேசுவதிலும் தனக்கு குரு ரஜினிதான் என்று முடிவே செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய்.

அரசியலில் தனது அடுத்த கட்டம் என்னவென்பதை ஆலோசிக்கவும், ரசிகர்களின் பணிகள் குறித்து பேசவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் ஒன்றில்தான் இந்த கூட்டம் நீ...ண்ட நேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் விஜய் எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்திய வசனம்... ஸாரிங்ணா பஞ்ச் வசனம் இது:

'நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன், இன்றைய தொண்டன் நாளைய தலைவன்... இதை மனதில் வச்சிக்கிட்டு செயல்படணும். உங்களால எனக்கு பெருமை கிடைக்கணும்... என்னால உங்களுக்கு பெருமையும் இருக்கும், எதிர்காலத்துக்கு உத்தராவாதமும் இருக்கும்' என ஏகத்துக்கும் ஏற்றிவிட, ஐயனார் கோயிலில் மந்திரித்து விட்டவர்கள் மாதிரி முறுக்கோடு வெளியில் வந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

எதுக்கு இந்த பில்ட் அப்?

வருகிற ஜூன் 22-ம் தேதி விஜய்க்கு பிறந்த நாள். அன்றைக்கு என்னென்ன செய்ய வேண்டும், கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடக்கவிருக்கும் இந்த பிறந்த நாள் விழா கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ரசிகர்களில் தேர்ந்தெடுத்த ஒரு பிரிவினரை தொண்டர் படை போல மாற்றுவது என பல்வேறு யோசனைகளை விஜய்யும் ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்தாலோசனை செய்தார்களாம்.

'வாக்காளர்கள் விரலில் மை வச்சுக்க தயாரா இருக்கும் போது, நாம அதுக்கான சரியான முன்னேற்பாட்டோட தயாரா அவங்க முன்னாடி நிக்கணும்... புரிஞ்சுதா?' என்று கூட்டத்தின் முடிவில் விஜய் கேட்டாராம்.

இதுக்கு தமிழரோட அகராதில 'வோட்டு அரசியல்' என்று பெயர்... வேற ஏதாவது அர்த்தம் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்ணா!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X