ஜீவாவை இயக்குவேன்-ஜெயம் ரவி

ஜீவா-பூனம் பாஜ்வா இணையில் உருவாகியுள்ள தெனாவெட்டு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இதில் ஜெயம் ரவி கலந்து கொண்டு சிடியை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில், ஜெயம் ரவி பேசுகையில், பாலிவுட்டில், இரண்டு ஹீரோ, 3 ஹீரோ சப்ஜெக்ட்டில் முன்னணி நடிகர்கள் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால் இங்கு அது அரிய விஷயம்.
இந்த நிலை மாற வேண்டும். நான் மாற்ற விரும்புகிறேன். இந்த நல்ல விஷயம் என் மூலம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
என்னிடம் ஒரு நல்ல கதை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தக் கதையை ஜீவாவிடம் கூறினேன். கதையைக் கேட்ட ஜீவா, அப்படத்தில் நடிக்க விரும்புவதாக சம்மதித்தார்.
எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் அந்தப் படத்தை இயக்குவேன். என்னுடன் ஜீவாவும் இணைந்து நடிப்பார். அடுத்த ஆண்டு இப்படம் உருவாகும் என்றார் ஜெயம் ரவி.
பின்னர் பேசிய ஜீவா, எனக்கும், ஜெயம் ரவிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அவருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த ஈகோ பிரச்சினையும் இல்லை என்றார் ஜீவா.
ஜீவா தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறார். அவர் நடித்த ராம், கற்றது தமிழ், ராமேஸ்வரம் ஆகிய மூன்று படங்களும் தோல்வியைத் தழுவின. கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம் ஈ. இந்த நிலையில் தெனாவெட்டு படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார் ஜீவா.
தெனாவெட்டு படம் குறித்து அதன் இயக்குநர் கதிர் கூறுகையில், இது இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கமர்ஷியல் மசாலா என்றார்.
விழாவில் ராம. நாராயணன், ஜீவன், சீமான், ஜித்தன் ரமேஷ், பேரரசு, சுப்ரமணிய சிவா, நா. முத்துக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











