twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தசாவதாரம்..வியந்து போன கருணாநிதி!

    By Staff
    |

    Kamal, Karunanidhi and KS Ravikumar
    இதுவரை பத்திரிகைச் செய்திகளாகவே இருந்து வந்த உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரத்தின், திரை அவதாரத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதி பார்த்து, ரசித்து, வியந்து கமல்ஹாசனையும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினர், அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் ஆகியோருக்காக சென்னை போர்பிரேம்ஸ் திரையரங்கில் நேற்று மாலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

    படம் பார்க்க வந்த முதல்வரை படத்தின் நாயகன் கமல் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    படத்தை முழுவதும் பார்த்து முடித்த பிறகு கமலை அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் கலைஞர். "ரொம்ப உழைச்சிருக்கய்யா... இந்த கடுமையான உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

    தசாவதாரத்தை ஆங்கிலத்தில் டப் செய்யாமலேயே ஹாலிவுட்டுக்குத் தாராளமாக கொண்டு செல்லலாம். அவர்களுக்கு நிகராக உன்னாலும் (கமல்) படத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டாய் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் முதல்வர்.

    படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் கமலிடம், "இது நீதானாய்யா... நம்பவே முடியலையே..." என்று வியந்து போனாராம்.

    கலைஞருடன் படம் பார்த்த முக்கியப் பிரமுகர் ஒருவர், படம் குறித்து நம்மிடம் கூறுகையில், இந்த மாதிரி ஒரு படம் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கமல் அற்புதம் செய்திருக்கிறார் என்றார் வியப்பு விலகாமல்.

    கமல் போட்டிருக்கும் 10 வேடங்களில் ஒன்று 110 வயது கிழவர் கெட்டப். இது கமல்தானா என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு மேக்கப் அதிசயம் நிகழ்த்தியிருக்கிறாராம் இந்த வேடத்தில்.

    அதேபோல தெலுங்குப் பேசும் பாத்திரம் ஒன்றிலும் அசல் ஆந்திராக்காரராகவே மாறியிருக்கிறாராம்.

    படத்தின் ஹைலைட் என்று சொல்லும் அளவுக்கு வந்திருப்பது நெல்லைத் தமிழ் பேசியபடி கலக்கும் கமல் அண்ணாச்சிதானாம்.

    பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளரந்த கமல் என்ற நல்ல நடிகருக்குள்ளே இத்தனை தத்ரூபமாக ஒரு நெல்லை அண்ணாச்சி ஒளிந்திருப்பதைக் கண்டு வியந்து போன முதல்வரும் அவருடன் படம் பார்த்த இதர விஐபிக்களுமே கைத் தட்டி ரசித்திருக்கிறார்கள்.

    இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 45 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ள படமும் தசாவதாரம்தானாம். அதிலும் சுனாமியில் கமல் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகளில் கிராஃபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அத்தனை பெர்பக்ஷன் காட்டியிருக்கிறார்களாம்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகிற செவ்வாய்க்கிழமை தசாவதாரம் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

    தசாவதாரம் வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது (அப்படிதானே, ரவிச்சந்திரன் சார்..?)

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X