த்ரிஷாவின் நாடகமா? கடுப்பில் நயன்!

By Staff

Simbu and Nayantara
பார்க் ஓட்டலில் நடிகர் விஷால் கொடுத்த தனிப்பட்ட விருந்தில் அவரது நண்பர்களுடன் கலந்து கொண்ட நயன்தாராவை சிம்பு சந்தித்தது தற்செயல் அல்ல, திட்டமிட்ட நாடகம் என்பதுதான் கோலிவுட்டில் இன்றைய டாக்!.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட த்ரிஷாவின் வாய்ப்புகள் அனைத்தும் இப்போது நயன்தாரா கையில். விஜய்யின் ஆஸ்தான நாயகி என்று கூறப்பட்டு வந்த த்ரிஷா ஓரங்கட்டப்பட்டார். இப்போது விஜய்யின் படத்தில் மட்டுமல்ல, பிறந்த நாள் விழா போன்ற தனிப்பட்ட விழாக்களிலும் நயன்தான் நாயகி.

குருவி படத்தில் தன் வாய்ப்பைப் பறித்துக் கொண்டார் என்ற கோபத்தில், நயனும் தேடிப் பிடித்து த்ரிஷாவின் வாய்ப்புகளை தனதாக்கி வருகிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட த்ரிஷாதான், திட்டமிட்டு நயன்தாரா இருக்குமிடத்தை சிம்புவுக்குச் சொல்லி வரவழைத்தார் என்று கிசுகிசுக்கிறார்கள்.

வாய்ப்பச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிம்புவும் நயனைச் சந்தித்த கதையை விஸ்தாரமாக எல்லா பத்திரிகைகளுக்கும் போன் போட்டு எக்ஸ்ளூஸிவாகக் கொடுத்து வருகிறார்.

இந்த விவரங்கள் பின்னர் தெரியவந்ததும் கடுப்பான நயன், த்ரிஷாவைப் போனில் பிடித்து வெளுத்தெடுத்தார் என்றும் கூறுகிறார்கள் நயனுக்கு நெருக்கமானவர்கள்.

இப்போது அவசர அவசரமாக தனது செல் நெம்பரை மாற்றிவிட்ட நயன்தாரா, சிம்புவிடன் சகவாசம் இனி எப்போதும் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

எப்படியெல்லாம் திட்டம் போடறாங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X