ரஜினி வெளியிடும் 'கந்த்ரி'

அஸ்வினி தத் தயாரித்துள்ள படம்தான் கந்த்ரி. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, தனிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு, மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி ஹைதராபாத் திரைப்பட நகரில் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார்.
ரஜினி நடிக்கவுள்ள குசேலன் தெலுங்குப் பதிப்பின் தயாரிப்பாளர்களில் அஸ்வினி தத்தும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம். கந்த்ரி படத்தின் ஆடியோவை வெளியிட வேண்டும் என்று தத் விடுத்த வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டாராம் ரஜினி.
குசேலன் படப்பிடிப்புக்காக இந்த வாரம் ரஜினி ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில், கந்த்ரி பட ஆடியோ விழாவுக்கு அஸ்வினி தத் ஏற்பாடு செய்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம் பட ஆடியோ விழாவும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த விழாவில் ஜாக்கி சானும் பங்கேற்கிறார் என்பது கூடுதல் விசேஷம்.


Click it and Unblock the Notifications











