ரஜினியின் மனிதாபிமானம்!

தனது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம் தொடர்பான விழாக்கள் அனைத்திலும் சித்ரா இருக்க வேண்டும் என விரும்புவார். அவருக்காக உதவிகள் செய்வதிலும் முன்னணியில் நிற்பார்.
பிரபலமான புகைப்படக்காரராக இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக சித்ராவால், மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சியோடு போட்டி போட்டு புதுப்புது கேமிராக்களை வாங்க முடியவில்லை.
இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, சித்ராவுக்கே தெரியாமல் ஒரு காரியம் செய்தார். தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் நிக்கான் தயாரிப்பான டி-80 ரக நவீன கேமிரா ஒன்றை வாங்கி வரச் செய்தார்.
மற்றவற்றை சித்ரா வாயாலேயே கேட்போம்:
"நேற்று பிற்பகல் திடீர்னு ரஜினி சார் கூப்பிடறார்னு போன் வந்துச்சு. நான் உடனே வேகமா மண்டபத்துக்குப் போனேன். ரஜினி சார் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். என்ன சித்ரா... எப்படி இருக்கு வேலைன்னு கேட்டவர், சடார்னு என் கைல டி-80 கேமிராவைக் கொடுத்தார். நான் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்ட நான் இதைக் கேட்கவே இல்லை.
மற்றவர்கள் கேட்காமலேயே உதவி செய்வதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே" என்கிறார் சித்ரா.


Click it and Unblock the Notifications











