படமாகிறது பாபா ராம்தேவ் கதை-ராம்தேவாக நடிக்கும் சஞ்சய் தத்!!

By Shankar

தடாலடி யோகா குரு பாபா ராம்தேவின் வாழ்க்கை சினிமாவாகிறது. பாலிவுட் இயக்குநர் மணிசங்கர் இதனை இயக்குகிறார்.

சினிமாக்காரர்களுடன் எப்போதும நெருக்கம் காட்டுபவர் பாபா ராம்தேவ். அவரது பல்வேறு நடவடிக்கைகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வந்தன. இந்நிலையில் ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் போராட்டத்தில் குதித்து பெரும் ஸ்டன்ட் அடித்தார்.

ஆனால் அரசு அதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிவிட்டது. ஆனாலும் இப்போது தனது ஆசிரமத்திலேயே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

பாபா ராம்தேவ் போராட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்பதால், இந்தக் கதையை சினிமாவாக எடுக்க இயக்குநர் மணிசங்கர் முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் உண்ணாவிரதக் காட்சிகளும் இடம் பெறுகின்றன. பாபா ராம்தேவ் வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர்தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் கூறினார். தற்போது பாபா ராம்தேவ் வாழ்க்கை நிகழ்வுகளை இயக்குனர் சேகரித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X