தனுஷ்-ஆண்ட்ரியாவின் மாலை நேரத்து மயக்கம்!

முதலில் இந்தத் தலைப்பு கார்த்தி- சந்தியா நடிக்கும் படத்துக்கு செல்வராகவனால் சூட்டப்பட்டது. அதன்பிறகு திட்டங்கள் தலை கீழாக மாறிவிட, இப்போது அதே கதை, அதே தலைப்பு, ஆனால் ஜோடி மட்டும் மாறியிருக்கிறது.
7 ஜி ரெயின்போ காலனி மாதிரி மனதை வருடும் மெல்லிய காதல் கதையை மையப்படுத்தி வரும் படம் இது.
படத்தின் விளம்பரத்திலேயே கதையின் முரண்பாட்டை அழகாகச் சொல்லிவிட்டிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.
'அவன் ஒழுங்கானவன் இல்லை... அவளுக்கு ஒரு கடந்த காலமிருக்கிறது... இது எப்படி சிறந்த திருமணமாகும்?' என்ற கேள்வியோடு படத்தின் டிசைன்களை வெளியிட்டுள்ளார் செல்வா.
இந்தப் படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். ஆர்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் விமலகீதா தயாரிக்கும் மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இந்தப் படத்தில் அஸோஸியேட் டைரக்டர் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











