twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆன்ட்டிகளை மடக்க..': ரஜினி - கமலை சிறுமைப்படுத்திய எஸ்.பி.பி மகன்!

    By Shankar
    |

    ஆன்ட்டிகளை எப்படி மடக்கலாம் என்று கேள்வி எழுப்பி, அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் பெயர்களை இழுத்து சிறுமைப்படுத்தியுள்ளாராம் பிரபல தயாரிப்பாளரான எஸ்பிபி சரண்.

    இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரண்ய காண்டம். மூன்றாம் தர மலையாளப் பட ரேஞ்சுக்கு இதில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளனவாம்.

    இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    52 காட்சிகளை வெட்டி நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர். குறிப்பாக ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்கள் அதிகமிருந்ததால், அனைத்தையும் நீக்கினார்களாம்.

    இதுபற்றி தணிக்கை அதிகாரி பழனிச்சாமி கூறும்போது, "ஆரண்ய காண்டம் படத்தில் ரஜினி, கமலை சிறுமைப்படுத்தும் காட்சிகள் உள்ளன.

    'ஆன்ட்டிகளை மடக்குவது எப்படி?' என்று இளைஞர்கள் பேசுவது போன்று ஒரு காட்சி.

    இதற்கு ஒருவன் இப்படி ஐடியா கொடுக்கிறான்: 'கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா? என்று ஆன்ட்டிகளிடம் கேள். கமல் பிடிக்கும் என்றால் கிஸ் கொடுத்து ஈஸியா மடக்கிவிடலாம். ரஜினி பிடிக்கும் என்றால் அந்த பெண்மணி வேறுமாதிரி மடக்க வேண்டும்' என்று விளக்கம் சொல்வது போன்று வசனங்கள் இருந்தன. அவற்றை நீக்கி விட்டோம்," என்றார்.

    இதில் ஜாக்கி ஷெராப் ராயபுரம் தாதாவாக நடித்துள்ளார். அவரது நிர்வாண காட்சிகள், ஆபாசமான மசாஜ் சீன்கள் போன்றவைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.

    இவைகளையும் தணிக்கை குழு நீக்கியுள்ளது. தணிக்கை குழு நடவடிக்கைக்கு எஸ்.பி.பி. சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தை டிரிபியூனலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    ஒருவேளை விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக இந்த வேலையைச் செய்திருப்பாரோ எஸ்.பி.பி. சரண்.

    English summary
    The Chennai censor boar objected scenes insulting legendary actors Rajini and Kamal in a films titled Aaranya Gandam, produced by S P B Charan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X