ஹீரோவாகிறார் உதயநிதி?

விஜய்யை வைத்து அவர் குருவியைத் தயாரித்த போதே இந்தப் பேச்சு இருந்தது. இப்போது, சூர்யா நடிக்கும் ஆதவன் படத்தைத் தயாரித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து ஒத்திகை பார்த்துக் கொண்டுள்ளாராம் உதயநிதி.
அடுத்ததாக ரெட்ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் உதயநிதியே நாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்குபவர் 'குருவி'யை எடுத்த இயக்குநர் தரணி என்கிறார்கள். மகனை நாயகனாகப் பார்ப்பதில் உதயநிதியின் தந்தையும் துணை முதல்வருமான ஸ்டாலினுக்கும் மிக விருப்பம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
குறிஞ்சி மலர் தொடர் மற்றும் சில படங்களில் ஸ்டாலினும் நடித்துள்ளது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications