இரட்டை இலை பச்சை: சேலத்தில் விஜய் ரசிகர்கள் மோதல்!

By Shankar

Vijay
சேலம்: நடிகர் விஜய் கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்ற போஸ்டர்களை ஒட்டியதால், அவரது ரசிகர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டனர்.

நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவளித்துள்ளார். இந்தத் தேர்தலில் அவரது மக்கள் இயக்கத்தினர் அதிமுக கூட்டணியில் போட்டியிடப் போவதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர் அவரது ஒரு பிரிவு ரசிகர்கள்.

இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.

இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று பரபரப்பு நிலவியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X