ரஜினி மகளின் பில்லா-2 வில் ஹீரோ அஜீத்?

சூப்பர்ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் சூப்பர்ஹிட்டான புதிய 'பில்லா' படத்தின் அடுத்த பாகத்தை நடிகர் அஜீத்தை வைத்தே எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ரூ. 10 சம்பளம் பேசி ஒப்பந்தத்தில் நடிகர் அஜீத் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையென்றால் தமிழ் திரைவுலகில் ரஜினிக்கு அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் அஜீத் என்ற பெருமை கிடைக்கும்.
இந்த படத்தை புதிய பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தனே இயக்குவார் என்று சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், படத்துக்கான ஆரம்பகட்ட கதை டிஸ்கஷன் முடிந்துவிட்டது. பிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அஜீத்தும், விஷ்ணுவர்த்தனும் சென்று திரும்பியவுடன் ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்றும் தெரிகிறது.
ஹாலிவுட் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் உடன் நான்கு தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரித்து தருவதற்கு ரஜினி மகள் ஐஸ்வர்யா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த வரிசையில் வரும் முதல் படமாக பில்லா-2 இருக்கும்.
இந்த படத்தில் அஜீத்தை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ரஜினியின் யோசனையாம். அஜீத்- விஷ்ணுவர்த்தன் வெற்றிக்கூட்டணி இதிலும் தொடரட்டும் என்றும் மகளிடம் ரஜினி கூறியுள்ளார்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படவேலைகள் முடிந்தவுடன் பில்லா-2 சூட்டிங் ஆரம்பாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











