மர்மயோகியில் அமிதாப்?

By Staff

Amitab
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பை முதல் முறையாக தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஜெயித்து விடுவார் போலிருக்கிறது.

ஆம், இதற்கு முன் எத்தனையோ தமிழ் வாய்ப்புகள் வந்தும், பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டு வந்த அமிதாப், தன் தமிழ் பிரவேசத்தை மர்மயோகியில் துவங்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கமல் அடுத்து நடித்து இயக்கும் நான்கு மொழிப் படமான மர்மயோகியில் பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது தெரிந்ததே...

இப்போது படத்தின் ஒரு முக்கிய ரோலில் அமிதாப்பையும் நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். முதலில் இந்த ரோலில் கமல் ஹாசனே நடிக்கவிருந்தாராம். ஆனால் இதுகுறித்து அமிதாப்போ கமலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

இன்னொரு பக்கம் தனது ஏபிசிஎல் கார்ப்பரேஷனை மீண்டும் புதுப்பித்து வரும் அமிதாப், தமிழில் படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே உல்லாசம் என்று ஒரு படம் எடுத்து ஏபிசிஎல் கையைச் சுட்டுக் கொண்டது நினைவிருக்கலாம். பெரிய பைனான்ஸ் சிக்கல்களிலிருந்து மீண்டுள்ள ஏபிசிஎல், இந்த முறை நல்ல கதைகள், திறமையான இயக்குநர்களை மட்டுமே நம்பி களமிறங்க உள்ளது.

எப்படியோ... அமிதாப் தமிழுக்கு வரப்போவது உறுதியாயிடுச்சி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X