நடிப்பில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த அமிதாப்

Amitab
நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1969 நவம்பர் மாதம் 7ம் தேதி க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கிய, 'சாத் இந்துஸ்தானி' வெளியானது. இதுதான் அமிதாப் நடித்த முதல் படம்.

அப்படத்தில், கோவாவை போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மீட்க போராடும் இஸ்லாமிய கவி வேடத்தில், நெட்டையான ஒரு இளைஞன் ஆக்ரோஷமாக நடித்ததை மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள்.

அமிதாப் பச்சன் என்ற பெயர் கொண்ட அந்த 27 வயது இளைஞன் அந்த ஆண்டின் சிறந்த புதுவரவுக்கான தேசிய விருதை பெற்றார். அதாவது முதல் படத்திலேயே தேசிய விருதைத் தட்டிச் சென்றார் அமிதாப்.

வழக்கமான ஹீரோக்களுக்கான லட்சணங்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்துடன் காணப்பட்டதால், அவரால் ஹீரோவாக பிரகாசிக்க முடியாது என திரைத் துறையினரும், சினி்மா பார்வையாளர்களும் அப்போது கமென்ட் அடித்தனர்.

ஆனால் பாலிவுட்டில், ஒரு ஹீரோவிடமிருந்து ரசிகர்கள் என்ன மாதிரியெல்லாம் சுவாரஸ்யங்களை, வித்தியாசங்களை, ஸ்டைலை எதிர்பார்த்தார்களோ அதையெல்லாம் திகட்டத் திகட்டத் தந்தார் அமிதாப்.

காதல், காமெடி, அதிரடி, சஸ்பென்ஸ், திரில்லர், சென்டிமெண்ட், ஆடல், பாடல் என ஏரியாக்களிலும் தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்தார் அமிதாப்.

அன்று முதல் இன்று வரை சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தலைமுறை பாரபட்சமின்றி நடிக-நடிகையரும் கூட அமிதாப்புக்கு ரசிகர்களாக உள்ளனர்.

தற்போது அமிதாபுக்கு 67 வயது. ஆனாலும் இந்த வயதிலும் இன்னும் மனம் கவர்ந்த இந்தி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் அமிதாப். முத்தாய்ப்பாக 13 வயது சிறுவனாக, பா படத்தில் படு வித்தியாசமான கேரக்ரில் கலக்கியுள்ளார் அமிதாப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X