விசாகப்பட்டனத்தில் கலக்கி சிரஞ்சீவி – குதிரை சவாரி செய்து அசத்தினார்

By Sudha

Chiranjeevi
விசாகப்பட்டனம்: அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நடிகரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி விசாகப்பட்டனத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது குதிரை சவாரி செய்து மக்களை கவர்ந்தார்.

கிட்டத்தட்ட அரை மணிநேரம் இந்த குதிரை சவாரி நடந்தது. விசாகப்பட்டனம் மாவட்டம் பயகரபோதா என்ற நகருக்கு சிரஞ்சீவி வருகை தந்தார்.

போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி யாத்திரை மேற்கொண்டுள்ள சிரஞ்சீவி, அதன் ஒரு பகுதியாக பயகரபோதா நகருக்கு வந்தார்.

அங்கு தனது கட்சி செயலாளர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது கட்சி செயலாளர் வீட்டில் குதிரை நிறுத்தப்பட்டிருந்த்தைப் பார்த்த சிரஞ்சீவிக்கு அதில் சவாரி விட ஆசை வந்தது. இதையடுத்து குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்த சிரஞ்சீவி நகரை வலம் வர ஆரம்பித்தார்.

இதைப் பார்த்து மக்கள் திரண்டு விட்டனர். குதிரை பின்னாலேயே கூட்டமாக ஓடி வந்ததால் நகரே பரபரப்பாகி விட்டது.

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் சிரஞ்சீவி யாத்திரையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X