twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அருள், அறிவு, நகுல்... ஒரு முக்கோணக் கதை!

    By Shankar
    |

    அருள்நிதியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், தற்போது நகுலை வைத்து தன் அடுத்த பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

    அறிவழகன் வெங்கடாசலம். சுருக்கமாக அறிவழகன். இயக்குனர் ஷங்கரின் மாணவர். தொழில்நுட்ப மிரட்டல் பிளஸ் நருக் சுருக் திரைக்கதையால் முதல் படமான 'ஈரம்' மூலம் கவனம் ஈர்த்தவர்.

    இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து 'எங்களுக்கு ஒரு படம் பண்ணித் தாங்க' என்ற வரிசையில் வந்த தயாரிப்பாளர்களை புறந்தள்ளி தன் கதைக்கு தோதானவர் என்று 'வம்சம்' ஹீரோ அருள்நிதியை அணுகினார். ஒரு கூடைப்பந்தாட்ட வீரரின் வாழ்க்கைதான் கதை என்பதால் தன் உயர உடல்வாகுக்கு தோதாக இருக்கும் என்று அருளும் அறிவின் கதையை டிக் அடித்தார். போட்டோசெஷன் கூட முடிந்தது.

    ஆனால் இது கொஞ்சம் காலம் எடுக்கக்கூடிய புராஜெக்ட் என்பதை லேட்டாக உணர்ந்த அருள், நீண்ட தயக்க மயக்கங்களுக்குப் பின் அதிலிருந்து பின்வாங்கினார்.

    கதாநாயகனுக்காக காத்திருப்பது முட்டாள்தனம் என்பதை காலதாமதமாக உணர்ந்த அறிவழகன், அந்தக் பேஸ்கட் பால் பிளேயர் கதையை நகுலுக்கு தோதாக மாற்றினார். உடனடி வெற்றிக்கு காத்திருந்த நகுலும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நகுல் என்றால் சன் பிக்சர்ஸ் இல்லாமலா... இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடும் என்கிறார்கள்!

    English summary
    'Eram' fame director Arivalagan's next movie is being made on the story of a basket ball player. Initially the director roped in with Vamsam Arunnidhi for the lead role, but now he picked Nakul as hero for this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X