வெற்றி அறிவைத் தராது - தோல்விதான் நமக்கு நிறைய கற்றுத் தரும்: ஷாருக் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக் கான் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குவிஸ் மாஸ்டராக மாறினார்.
பெங்களூரில் நிர்வாகவியல் மாணவர்களுக்கான குவிஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாஸ்டராக கலந்து கொண்டு சரமாரியாக கேள்விகள் கேட்டார் ஷாருக் கான்.
அப்போது அவர் மாணவர்களிடையே பேசுகையில், வாழ்க்கையில் எங்காவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் சற்றும் மனம் தளராதீர்கள். அது நல்லது. வெற்றி பெற்றுக் கொண்டே வருவது பெரிதல்ல. அதனால் நமக்கு எந்தப் பயனும் உண்மையில் கிடையாது.
வெற்றி நமக்கு எதையும் கற்றுத் தராது. மாறாக தோல்விதான் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தரும். எனவே வெற்றி என்பதை விட தோல்விதான் மிகவும் முக்கியம்.
தோல்வி நமக்கு பல படிப்பினைகளை கற்றுத் தரும் சிறந்த ஆசான். அதேபோல தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சமும் கூட ஒரு வகையில் உங்களை உஷாராக வைத்திருக்க உதவும். தோல்வியைத் தவிர்க்கும் சிந்தனைகளை அது தூண்டி விடும். சரியான கோணத்தில் நீங்கள் சிந்திக்கவும், செயல்படவும் அது உதவும்.
தோல்வி எந்த ரூபத்திலும் வரலாம். அந்த அனுபவத்தால் உங்களது வாழ்க்கை மேம்படும். சரியான திசையில் செல்லும்.
எனவே தவறு செய்து விட்டால் வருந்தாதீர்கள், கவலைப்படாதீர்கள். நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அது உங்களுக்குக் கற்றுத் தரும். அடுத்த முறை சரியாக செய்து விடுவர்கள். கடினமாக உழைப்பதற்கு தோல்வி ஒரு படிக்கட்டாக அமையும் என்றார் ஷாருக் கான்.


Click it and Unblock the Notifications











