'ரேம்போ' ரவி

ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம்தான் பேராண்மை. இப்படம் சில காலத்திற்கு முன்பே பேசப்பட்டது. ஆனால் திடீரென ரஜினியை வைத்து ரோபோட் படம் தயாரிக்க ஐங்கரன் முடிவு செய்ததால் பேராண்மை அவ்ளோதான் என கூறப்பட்டது.
ஆனால் சத்தம் போடாமல், பூஜை போன்ற எதையும் செய்யாமல் படத்தை ஆரம்பித்து விட்டனராம். புதன்கிழமை முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மாஞ்சோலை, பாபநாசம், அம்பாசமுத்திரம் ஆகிய எழில் கொஞ்சும் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம். மொத்தம் ஐந்து நாயகிகளாம். அவர்களை இன்னும் முடிவு செய்யவில்லை.
படத்தை இயக்குவது இயற்கை புகழ் ஜனநாதன். படத்தின் கதை குறித்து ஜனநாதன் கூறுகையில், இது முழுக்க முழுக்க அதிரடி, ஆக்சன் படம் என்றார்.
ஜெயம் ரவி இப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டேலோன் ரேஞ்சில் அதிரடியாக நடித்துள்ளாராம். தென் மாவட்டங்களில் தீராத வியாதியாக இருக்கும் ஜாதி மோதல்களை எதிர்த்துப் போராடும் நாயகனாக வருகிறாராம்.
ஏகாம்பரம், சதீஷ்குமார் கேமராவைக் கவனிக்கிறார்கள். இப்படத்துக்காக ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட்ட அதி நவீன கேமரா பயன்படுத்தப்படவுள்ளதாம். வனப் பகுதிகளில் எடுக்கப்படவுள்ள சண்டைக் காட்சிகளை இந்த கேமரா மூலம் படமாக்கவுள்ளனராம். பார்க்க படு பிரமிப்பாக இருக்குமாம் சண்டைக் காட்சிகள். இசைக்கு வித்யாசாகர்.
இதில் ரவிக்கு 5 ஹீரோயின்கள் என்கிறார்கள். அதில் ஒருவர் நவ்யா நாயராம்.


Click it and Unblock the Notifications











