அடுத்த படம் தலைவன் இருக்கின்றான்! - கமல் அறிவிப்பு

By Chakra

தனது அடுத்த படம் தலைவன் இருக்கிறான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன்.

கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்தை தானே இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், "இப்போது எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது.

இது ஒரு பெரிய பட்ஜெட் படம். சர்வதேச சமூகத்தைப் பற்றியதான இந்தப் படம்தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றும் இணைந்து தயாரிக்கிறது," என்று கூறியுள்ளார்.

அநேகமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உதவும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X