ரசிகர்களை அடித்த மோகன்லால் மம்முட்டி!

மோகன்லால் தலைமையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதம் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். பாடலுக்கு நடிகை லட்சுமி கோபால்சாமி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் இப்போது வீடியோ காட்சியாக இண்டர்நெட் முழுக்க ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமல்லாமல், நேற்று முழுவதும் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மம்முட்டி விட்ட பளார்!
இதேபோல சில மாதங்களுக்கு முன்பு கோழிகோட்டில் மம்முட்டி நிகழ்ச்சியிலும் நடந்தது.
நிகழ்ச்சியில் மம்முட்டி பேசிக்கொண்டிருக்கும்போது அவரைத் தொட்டுவிட்ட ரசிகர் ஒருவருக்கு மம்முட்டி 'பளார்' என அறைவிட்டார். இந்த நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், மோகன்லால் நடத்தியுள்ள தாக்குதலுக்குப் பிறகு இதையும் சேர்த்தே இப்போது ஒளிபரப்பி வருகிறார்கள்.
அடிக்காதீங்கப்பா...!


Click it and Unblock the Notifications











