ரூ. 40 கோடிக்கு 'குசேலன்' இன்ஷூர்!

முன்னணி நடிகர்களின் படங்களை இன்சூரன்ஸ் செய்வது இப்போது பேஷனாகி வருகிறது. சமீபத்தில் தசாவதாரம் படத்தை அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ. 43 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்தார்.
இதுதான் தமிழ் சினிமாவிலேயே அதிக தொகைக்கு இன்ஷூர் செய்யப்பட்ட முதல் படம். ஆனால் இன்சூரன்ஸ் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெயர் அந்நியனையே சேரும். இப்படம் ரூ. 27 கோடிக்கு இன்ஷூர் செய்யப்பட்டது.
இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள குசேலன் படத்தையும் இன்சூரன்ஸ் செய்துள்ளனர். தமிழ் பதிப்பு ரூ. 40 கோடிக்கும், தெலுங்குப் பதிப்பான குசேலடு ரூ. 30 கோடிக்கும் இன்ஷூர் ஆகியுள்ளது. மொத்தமாக ரூ.70 கோடிக்கு இரு மொழிப் படங்களும் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குசேலன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான செவன்ஆர்ட்ஸ் விஜயக்குமார் கூறுகையில், குசேலன் படத்தை ரூ. 40 கோடிக்கும், குசேலடுவை ரூ. 30 கோடிக்கும் இன்சூரன்ஸ் எடுத்துள்ளோம்.
மார்ச் மாதம் முதல் 6 மாதங்களுக்கு இன்சூரன்ஸ் காலம் அமலில் இருக்கும் என்றார்.
இதற்கிடையே, குசேலன் படத்தில் தனது காட்சிகளுக்குரிய டப்பிங்கை ரஜினி முடித்துக் கொடுத்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











