ராணாவுக்கு முன் இமயமலை செல்லும் ரஜினி!
முன்பெல்லாம் தனது படம் ரிலீஸான பிறகு இமயமலைக்குச் செல்வார் ரஜினி. எந்திரன் வரை அதுதான் வழக்கமாக இருந்தது.
இப்போது, ராணா படம் துவங்குவதற்கு முன்பே இமயமலைக்குப் போய் அங்குள்ள துறவிகளிடம் ஆசி பெறவிருக்கிறார் ரஜினி
கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராணா, வரும் மார்ச் இறுதியில் துவங்கும் என்று தெரிகிறது. அதற்கு முன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்.
இதற்கான பயணத் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
இந்தப் பயணத்தில் இன்னொரு நோக்கமும் உள்ளது. இமயமலையில் யாத்ரீகர்கள் நடந்து செல்லும் பாதையில் ரஜினி புதிதாக ஆசிரமம் ஒன்றைக் கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் கட்டுமான பணிகளை இந்தப் பயணத்தின் போது நேரில் பார்வையிடவிருக்கிறாராம்.
இந்தப் பயணம் முடிந்ததும், ராணா பூஜை சென்னையில் நடக்கிறது. பின்னர் அவர் படப்பிடிப்புக்காக லண்டனுக்குச் செல்கிறார். தேர்தலின் போது மட்டும் ஓட்டுப் போட சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











