ரவி இல்லாத ராஜா படம்!!

இப்போது தன் தம்பி ஜெயம் ரவி இல்லாமல் ஒரு படத்தை இயக்கப் போகிறார் ராஜா!
குடும்பத்தில் ஏதும் குழப்பமோ என்று எண்ணிவிட வேண்டாம்... இது தெலுங்குப் படம். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை உடனே துவங்க வேண்டும் என ராஜாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் அதன் தயாரிப்பாளர்.
ஆனால் தன் தம்பி ரவிக்காக ஒரு ஒருஜினில் கதையை தமிழில் ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளார் ராஜா. இந்த இரு படங்களில் எதை முதலில் துவக்குவது என்ற குழப்பம் இருந்து வந்தது அவருக்கு.
இப்போது ரவியின் கைவசம் உள்ள படங்களைக் கருத்தில் கொண்டு, முதலில் தெலுங்குப் படத்தை இயக்கிவிட முடிவெடுத்திருக்கிறார் ராஜா.
தெலுங்கில் படம் இயக்குவது ராஜாவுக்கு இது முதல் முறையல்ல. ஆறு வருடங்களுக்கு முன்பே தென்காசிப் பட்டணம் படத்தை ஹனுமான் ஜங்ஷன் எனும் பெயரில் இயக்கியுள்ளார்.
பிரபாஸ் படத்துக்கு கதாநாயகியாக ஜெனிலியாவை நடிக்க வைக்கும் திட்டமுள்ளதாம் ராஜாவுக்கு. ஆனால் அமீர்கான் தயாரிப்பில் ஜெனிலியா நடித்த இந்திப் படம் தாறுமாறாக வெற்றி பெற்றிருப்பதில், அம்மணி மீண்டும் தெற்குப் பக்கம் திரும்புவாரா என்றே தெரியாததால், மிகுந்த யோசனையில் இருக்கிறார் ராஜா.
புதுசா உருவாக்குங்க...


Click it and Unblock the Notifications











