இனி 'எடிட்டர் சரத்குமார்!'

ஆம்... பத்திரிகை நிருபராக இருந்து, நடிகராகி, அரசியல் கட்சி துவங்கி மீண்டும்...பத்திரிகையாளராக மாறியிருக்கிறார்.
'மீடியா வாய்ஸ்' எனும் புதிய ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இன்று அவர் தன்னை அறிவித்துள்ளார்.
இனி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாகத் திகழுமாம் இந்த மீடியா வாய்ஸ்.
இன்று காலை எழும்பூர் நீதி மன்றத்துக்கு வந்த சரத்குமார் (இங்குதான் பத்திரிகை பதிவாளர் அலுவலகம் உள்ளது) அங்குள்ள பெருநகர நீதிபதி முன்பு தன்னை மீடியா வாய்ஸின் ஆசிரியராக பதிவு செய்தார். பின்னர் அதை கூடியிருந்த பத்திரிகையாளர்களிடமும் அறித்தார்.
சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 31ம் தேதியன்று இந்தப் பத்திரிகை வெளி வருமாம். அ.ச.ம.கவின் மூன்றாவது பிறந்த நாளுக்கு தன்னுடைய பரிசு இது என்று அறிவித்துள்ளார் சரத்.
Comments
asmk அரசியல் சரத்குமார் சினிமா தமிழ் பத்திரிகை ஆசிரியர் மீடியா வாய்ஸ் cinema editor media voice register sarathkumar


Click it and Unblock the Notifications