கமலுடன் திரிஷா- ஷ்ரியா!

தசாவதாரத்ைத பெரும் ஹிட் ஆக்கி விட்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் அடுத்த படமான மர்மயோகிக்கு போய் விட்டார். அதுதொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.
நாயகி மற்றும் இதர கலைஞர்களை புக் செய்யும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே நாயகியாக திரிஷாவும், முக்கிய பாத்திரத்தில் ஹேமமாலினியும் புக் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இன்னொரு பிரமாண்டமாக ஷ்ரியாவும் புக் ஆகியுள்ளதாக கமல்ஹாசனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பும் கூட ஷ்ரியாவின் பெயர் அடிபட்டது. ஆனால் அதுகுறித்து கருத்து ெதரிவித்த ஷ்ரியா,அப்படியெல்லாம் யாரும் தொடர்பு கொள்ளவிலைல என்று மறுத்திருந்தார். சம்பளம் கூடக் கேட்டதாகவும், அதனால் ஷ்ரியாவை கமல் தரப்பு பட்டியலிலிருந்து விலக்கியதாகவும், அந்த விரக்தியில்தான் ஷ்ரியா அப்படி கூறியதாகவும் பின்னர் கூறப்பட்டது.
ஆனால் தற்போது கமல் தரப்பு தெரிவித்த சம்பளத்திற்கு ஷ்ரியா ஒத்து வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரையும் படத்தில் சேர்த்துள்ளனராம்.
படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் கமலின் மனைவியாக வருகிறாராம் ஷ்ரியா. படத்தின் மெயின் ஹீரோயினாக வருகிறார் திரிஷா.
அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கக் கூடும் எனத் தெரிகிறது. ஹாலிவுட் கேமராமேன் இப்படத்தில் பணியாற்றவுள்ளார். எனவே உலக நாயகனின் படம் உலகத் தரத்துடன் 'பார்க்கும்' வகையில் இருக்கும் என நம்பலாம்.
படத்தின் கலைஞர்கள், இதர விவரங்களை கமல்ஹாசன் மும்பையில், அக்டோபர் 19ம் தேதி பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள படத் தொடக்க விழாவின்போது வெளியிடவுள்ளார்.


Click it and Unblock the Notifications











