பிப்ரவரியில் 'தீன் பட்டி'
அமிதாப் பச்சன், பென் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள திரில்லர் படமான தீன் பட்டி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸாகிறதாம்.
1982ம் ஆண்டு வெளியான காந்தி படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தவர் கிங்ஸ்லி. ஆஸ்கர் விருது பெற்ற கிங்ஸ்லியை இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரையை அலங்கரிக்க வருகிறார் கிங்ஸ்லி - தீன் பட்டி மூலமாக.
அமிதாப் பச்சனும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் லீனா யாதவ் கூறுகையில், இந்தியா, இங்கிலாந்தில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான திரில்லர் படம் இது என்றார்.
படத்தில் மாதவன், ரெய்மா சென் ஆகியோரும் உள்ளனர். அம்பிகா இந்துஜா தயாரித்துள்ளார். சலீம் - சுலைமான் இசையமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











