மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்... ஜோடி அசின்!

சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிவராஜ் வெங்கடராஜூ என்பவர் தயாரிக்கிறார். இவர் வேறு யாருமல்ல, விஜய் நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியான ப்ரியமானவளே படத்தைத் தயாரித்தவர். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படமே தயாரிக்கவில்லை அவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு விஜய் படம் மூலம் மறுபிரவேசமாகிறார்.
பாடிகார்டு ஒரிஜினல் படத்தை இயக்கிய சித்திக் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தமிழில் விஜய்யின் இமேஜுக்கு ஏற்ப அந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம் சித்திக்.
பெரிய மனிதர்களுக்கு பாடிகார்டாகப் போவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காமெடி கலந்த சமாச்சாரங்கள்தான் இந்தப் படம். நயன்தாரா - திலீப் நடித்து மலையாளத்தில் சராசரிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சித்திக் ஏற்கெனவே விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படம் எடுத்தவர்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் அசின். வடநாட்டு மோகம் குறைந்து, போன மச்சாள் (மச்சானுக்கு ஆப்போஸிட்?!) கதையாக, மீண்டும் கோடம்பாக்கம் திரும்பக் காத்திருந்தவருக்கு இந்த வாய்ப்பு லட்டு மாதிரி அமைந்துவிட கப்பென்று பிடித்துக் கொண்டாராம்!!


Click it and Unblock the Notifications











