ஹாரிஸ் - விஷால் மோதல்?

விஷால், நயன்தாரா நடிக்கும் படம் சத்யம். ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
ஆனால் விஷாலுக்கும் ஜாரிஸ் ஜெயராஜுக்கும் தகராறு என்றும் இந்தப் படத்தின் பின்னணி இசையை மணி சர்மா அமைப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து விஷால் கூறியதாவது:
ஹாரிஸ் ஜெயராஜ்தான் பின்னணி இசை அமைக்கிறார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி சிடி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
இப்போது படத்துக்கு பின்னணி இசையையும் அவர்தான் அமைக்கிறார். அவருடன் 80 இசை கலைஞர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் கேரளாவிலும் ரிலீசாகிறது. முதல்முறையாக அதிகபட்சமாக 70 பிரதிகளுடன் என் படம் ஒன்று கேரளாவில் ரிலீஸாவது மகிழ்ச்சியாக உள்ளது.
பத்திரிகைகளில் இப்படத்தை பற்றிய சின்ன செய்திக்குக் கூட நானும், நயன்தாராவும் நடித்துள்ள கவர்ச்சி படங்களைத்தான் வைக்கிறார்கள். இது என் தவறில்லை. அவர்களுக்கும் பத்திரிகை விற்க வேண்டுமல்லவா...
இது ஒரு போலீஸ் கதை. ஆந்திராவில் சல்யூட் என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் நான் நடிக்கும் முதல் நேரடிப் படம் இதுதான். தெலுங்கு டப்பிங்கும் கூட நானேதான் பேசியுள்ளேன் என்றார் விஷால்.
விஷால் பேசுவது 'சத்யம்' என நம்புவோம்!


Click it and Unblock the Notifications











