ஆகாஷ் 'லிப்'புக்கு மனைவி 'லாக்'!

By Staff

Adada Enna Azhagu
சினிமாவில் உட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சிகளில் இனி நடிக்கக் கூடாது என ஜெய் ஆகாஷூக்கு தடை போட்டிருக்கிறாராம் அவரது புது மனைவி ரிஷா.

அடடா என்ன அழகு படத்தில் நாயகனாக நடித்து வரும் ஜெய் ஆகாஷ், அந்தப் பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் கூறியதாவது:

இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. எனக்குத் திருமணம் முடிந்த கையோடு நான் ஒப்புக் கொண்ட படம் இது.

படத்தில் நாயகி நிக்கோலுடன் நெருக்கமான காட்சிகள் பல இருந்தன. காட்சிகள் நிஜமாக வரவேண்டும் என்பதற்காக என் மனைவி ரிஷாவின் பெயரையே நிக்கோலின் பாத்திரத்துக்கு வைத்துவிட்டார் இயக்குநர் ஜெயமுருகன்.

தட்டோடு உதடு பதிக்கும் காட்சிகளும் இருந்தன. இதையெல்லாம் தெரிந்து கொண்ட என் மனைவி, 'இனிமேல் இந்த மாதிரி காட்சிகள்ல நடிக்காதீங்க..' என அன்புக் கட்டளை போட்டுவிட்டார்.

நானும் ரிஷாவும் நீண்ட வருடங்களாகக் காதலித்து வந்தோம். அந்தக் காதல் நல்ல விதமாக கல்யாணத்தில முடிந்தது. எனவே மனைவியின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இனி முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

இந்த விஷயத்தை சொன்னதும் இயக்குநர் முதலில் அப்செட் ஆகிவிட்டார்(!). ஆனால் பின்னர் என் மனதைப் புரிந்து கொண்டு விட்டுவிட்டார், என்றார் ஆகாஷ்.

அடடா என்ன அழகு...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X