ட்விட்டரில் ஆமிர்-பச்சனை முந்தினார்!

ஆமிர்கானும் தற்போது ட்விட்டரில் குதித்து விட்டார். ஜூன் 30ம் தேதி டெஸ்ட் பக்கத்தை அவர் வெளியிட்டார். அது வெளியான அடுத்த 12 மணி நேரங்களில் 40,000க்கும் மேற்பட்ட பின்பற்றுவோர் அவருக்குக் கிடைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று, ஜூலை 1ம் தேதி முறைப்படி அவரது பக்கம் செயல்படத் தொடங்கியது. இன்று மட்டும் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அமிதாப் பச்சன்தான் ஆமிர்கானை ட்விட்டரில் இணையுமாறு அட்வைஸ் செய்தாராம். ஆனால் குருவை மிஞ்சிய சிஷ்யனாக, அமிதாப்பச்சனை விட அதிக பின்பற்றுவோரை பிடித்துள்ளார் ஆமிர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் நுழைந்தபோது முதல் நாளில் 37,500 பின்பற்றுவோர் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் செய்தியிலேயே அமிதாப்பச்சனுக்கு நன்றி கூறியிருந்தார் ஆமிர்.
அதில் அமிதாப்பை வெகுவாக பாராட்டி, வணங்கியிருந்தார். இதற்கு அமிதாப் பச்சன் அளித்த பதிலில், நன்றி ஆமிர், எனக்கு பொருத்தமானதை விட கூடுதலாகவே பாராட்டி விட்டீர்கள் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











