கார் வரி ஏய்ப்பு மோசடியில் பிருத்விராஜ்!

By Staff

Prithivraj
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு உரிய வரி செலுத்தாத மலையா-தமிழ் நடிகர் பிருத்விராஜ் மீது வரி மோசடி வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.

பிருத்விராஜ், சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மன் கார் ஒன்றை டெல்லி ஏஜென்சி மூலம் வாங்கினார். இறக்குமதி வரியைக் குறைப்பதற்காக வேறு மாடல் கார் போன்று டாக்குமென்ட்களை தயார் செய்து கொடுத்து திருவனந்தபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதே காருக்கு கொச்சி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பிட்னஸ் சான்றிதழுக்காக பிருத்விராஜ் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார் மாடல் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கேரள போக்குவரத்து ஆணையர் ஆனந்த கிருஷ்ணன், திருவனந்தபுரம் ஆர்.டி.ஓ ஜார்ஜுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது விசாரணையை தொடங்கியுள்ள அவர், காரின் விவரங்களை கேட்டு டெல்லி ஏஜென்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் கார் மாடலை மாற்றி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது உறுதியானால் பிருத்வி ராஜ் மீது வரி மோசடி வழக்கு பதிவு செய்யப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X