காஞ்சியில் சிரஞ்சீவி யாகம்!

வரும் 21, 22ம் தேதிகளில் நடக்கும் இந்த யாகத்துக்கு சதம் சண்டி ஹோமம் என்று பெயராம். அரசியல் அதிகாரம் மற்றும் லட்சுமி கடாட்சம் வேண்டி நடத்தப்படும் யாகம் இது.
கோயில் குருக்கள் நடன சாஸ்திரிகள் தலைமையில் 50 வேத விற்பன்னர்கள் சிரஞ்சீவிக்காக இந்த ஹோமத்தை நடத்தப் போகிறார்கள்.
வருகிற 22ம் தேதி சிரஞ்சீவிக்கு 55-வது பிறந்த நாள். அன்று அவர் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து, ஹோமத்தில் கலந்து கொள்வார் என்று நடன சாஸ்திரி தெரிவித்தார்.
புதிய கட்சியின் பெயர் மற்றும் பிற விவரங்களையும் கூட சிரஞ்சீவி அன்றே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோரும் இதற்கு முன் காமாட்சியம்மன் கோயிலில் இதே போன்ற யாகங்களை நடத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











